எருமை மாடொன்று, இலங்கை மதிப்பில் 02 கோடி 14 லட்சம் ரூபாவுக்கு விற்பனை

🕔 December 20, 2021

ருமை மாடு ஒன்று 80 லட்சம் ரூபாய்க்கு (இலங்கை மதிப்பில் 02 கோடியே 14 லட்சம் ரூபா) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

சுமார் ஒன்றரை டொன் எடையுள்ள ‘கஜேந்திரா’ என்ற அந்த எருமை மாட்டோடு செல்ஃபி எடுத்துக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தில் இந்த எருமை விற்பனையாகியுள்ளது.

இந்த எருமை மாட்டின் எடையை பராமரிக்க, இந்த மாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 15 லீட்டர் பால் கொடுப்பதாகவும், நான்கு வேளையும் கரும்பு, புல் உணவாக கொடுக்கப்படுவதாக மாட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.

இனப்பெருக்கத்துக்கு இந்த வகை மாடுகள் பெரிதும் உதவும் என்பதால், பல லட்ச ரூபாய் கொடுத்து இந்த எருமையை வாங்க விவசாயிகள் போட்டி போட்டுள்ளனர்.

Comments