ஒலுவில் பிரதேசத்தில் மோசடியான முறையில் தொலைத் தொடர்புக் கோபுரம்: ‘பல்டி’யடிக்கிறார்கள் பிரதேச சபையினர்

🕔 December 12, 2021

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவிலில் தொலைத் தொடர்பு கோபுரமொன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அங்கு கோபுரம் நிர்மாணிப்பதை நிறுத்துவதற்குரிய முயற்சிகைளை மேற்கொள்ளுமாறும் – அப்பிரதேச மக்கள் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவருக்கு 91 பெதுமக்கள் ஒப்மிட்டு அனுப்பி வைத்துள்ள மேற்படி கடிதத்தின் பிரதிகள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச செயலாளர், பிராந்திய சுகாதார பொறுப்பதிகாரி உள்ளிட்டோருக்கும் ஜனாதிபதி செயலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த தொலைத் தொடர்பு கோபுர நிர்மாணத்துக்கு பிரதேச சபையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என அட்டாளைச்சேனை பிரதேச சபையிடம் வினவியபோது, தனக்கு தெரியாமல் தவிசாளர் இதற்கான அனுமதியை கொடுத்துள்ளதாக செயலாளர் கூறியதாகவும், அதேபோல் – அனுமதியை செயலாளர்தான் தன்னிடம் சொல்லாமல் கொடுத்துள்ளார் என தவிசாளரும் கூறியதாகவும் ‘புதிது’ செய்தித்தளத்திடம் ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.

இதேபோன்றதொரு தொலைத் தொடர்பு கோபுரத்தை அட்டாளைச்சேனை சந்தைப் பகுதிக்கு அருகாமையிலுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் கடந்த வருடம் மார்ச் மாதம் நிர்மாணிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியொன்றும், பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமொன்றின் கோபுரத்தை அமைக்கும் பொருட்டு, அட்டாளைச்சேனையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கும் குறித்த தனியார் நிறுவனத்துக்கும் இடையில் எவ்வித எழுத்து மூல ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்படாத நிலையிலேயே, மேற்படி கோபுரம் அமைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

தகவலறியும் உரிமைக்கான சட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சபையிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட விவரங்களின் மூலம், ஒப்பந்தமின்றி மேற்படி கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை அம்பலமாகி இருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே, ஒலுவில் பிரதேசத்திலும் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்பா செய்தி: ஒப்பந்தங்கள் இன்றியே, தனியார் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க அனுமதி: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி அம்பலம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்