ஆசியாவின் ராணி: உலகின் மிகப் பெரிய ஒற்றை நீல மாணிக்கக் கல், இலங்கையில் கண்டெடுப்பு

🕔 December 12, 2021

லங்கையில் மிகப் பெரிய நீல மாணிக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உலகிலே மிகப் பெரிய ஒற்றை நீல மாணிக்கல் இதுவெனக் கூறப்படுகிறது.

குறித்த கல்லுக்கு ‘ஆசியாவின் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கல்லின் எடை கிட்டத்தட்ட 310 கிலோகிராம் ( 1.550,000  கேரட்) என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் ரத்தினபுரியில் 510 கிலோகிராம் எடையுடைய நீல மாணிக்க கொத்துக் கல் கண்டு பிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாணிக்கக் கல்லை இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலம் ஒன்றில், 250 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (5044 கோடி ரூபா) விலைபேசப்பட்டதாக அண்மையில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்திருந்தார்.

ஆயினும் அதனை விற்பனை செய்ய உரிமையாளரும் இலங்கை ரத்தினக் கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையும் இணங்கவில்லை.

அந்தக் கல்லுக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் (8071 கோடி ரூபா) இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்டதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்