கிண்ணியா நகர சபைத் தலைவருக்கு விளக்க மறியல்

🕔 November 25, 2021

திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 06 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான கிண்ணியா நகர சபை தவிசாளர் எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம் இன்று பகல் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்தே இவரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை – குறிஞ்சாக்கேணி பகுதியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் நேற்று முன்தினம் கவிழ்ந்ததில் 04 மாணவர்கள் உட்பட அறுவர் பலியாகினர்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் மிதப்பு பால உரிமையாளர் உட்பட மூவர் நேற்று கைது செய்யப்பட்டு, திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் டிசம்பர் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மிதப்பு பாலம் – படகுசேவை நடத்துவதற்கான அனுமதியை கிண்ணியா நகரசபைத் தலைவர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்