பிரபாகரன் போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்: ஸ்ரீதரனுடனான வாக்குவாதத்தின் போது டக்ளஸ் தெரிவிப்பு

🕔 November 23, 2021

– முன்ஸிப் –

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர் என்று, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் இன்று (23) தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது இடைமறித்த டக்ளஸ் தேவானந்தா இதனைக் கூறினார்.

“பிரபாகரன் போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டமை உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம் அல்லது நீங்கள் மறைக்கலாம். எனவே பொய்யான விடயங்களை சபையில் தெரிவிக்க வேண்டாம்” எனவும் டக்ளஸ் இதன்போது குறிப்பிட்டார்.

முன்னதாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்; “வடக்குக்கு வந்த ஞானசார தேரர் கேட்கின்றார், மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடும் நீங்கள், ஏன் போதைவஷ்துக்களுக்கு எதிராக பேசவில்லை என்று.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கிலே யாராவது போதைப் பொருளால் பாதிக்கப்பட்டுள்ளனரா? யாரும் போதைவஷ்து உட்கொண்டதாக அறிந்திருக்கிறீர்களா? கஞ்சா என்கிற சொல் 2009க்கு முதல் – வடக்கு கிழக்கில் இருந்திருக்கிறதா? இதை யார் கொண்டுவந்தார்கள்? இது யாரால் நடைபெறுகிறது?

ராணுவம், பொலிஸ், கடற்படை, விமானப்படை அங்கு உள்ளபோது, எவ்வாறு போதைப் பொருட்கள் அங்கு வந்து சேர்கின்றன” என கேள்வியெழுப்பினார்.

இதன்போது குறிக்கிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா; புலிகள்அமைப்பின் தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்