போதைப்பொருள் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடையில் கைது

🕔 October 30, 2021

ஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ராஜகிரிய, பொல்வத்த பிரதேசத்தில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருதொகை கேரள கஞ்சாவுடன் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய, அவரின் கைத்தொலைபேசியில் பதிவான அழைப்புகளை ஆராய்ந்தபோது, குறித்த போதைப்பொருள், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடையது என கண்டறியப்பட்டதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

மேலும் சீருடை அணிந்திருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து சுமார் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். 

Comments