லிற்றோ கேஸ்: நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்ட விலையில் திருத்தம்: புதிய விலை அறிவிப்பு

🕔 October 11, 2021

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலைகள் நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயுவின் விலை 75 ரூபாவினால், 05 கிலோ எரிவாயுவின் விலை 30 ரூபாவினாலும், 2.5 கிலோ எரிவாயுவின் விலை 14 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த விலைக் குறைப்பின்படி, 12.5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 2,675 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 1,071 ரூபாவாகவும், 2.5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 506 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம், லிற்றோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

அதற்கமைய, 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 520 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்