ஆதாரம் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், இல்லாவிட்டால் விடுவியுங்கள்: றிசாட் பதியுதீன் தொடர்பாக நாடாளுமன்றில் ரணில் உரை

🕔 October 4, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாங்கல் செய்ய வேண்டும் அல்லது சிறையில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என, ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (04) நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றிய போது;

“றிசாட் பதியுதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து, அதனைக் கொண்டு செல்லுங்கள். இல்லையென்றால் அவர் விடுவிக்கப்பட வேண்டும். இது நாடாளுமன்ற உறுப்பினரின் பிரச்சினையல்ல; இந்த சபையைப் பாதிக்கும் பிரச்சினையாகும்” என கூறினார்.

றிசாட் தியுதீனுக்கு எதிராக சாட்சிகள் மற்றும் அவர் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமா என சட்டமா அதிபரிடம் விசாரிக்குமாறும் இதன்போ சபாநாயகரை ரணில் கேட்டுக்கொண்டார்.

ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறி 24 ஏப்ரல் 2021 அன்று கைது செய்யப்பட்ட றிசாட், இதுவரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தனது கொழும்பு இல்லத்தில் பணிபுரிந்த வீட்டுப் பணிப்பெண்ணுடைய மரணம் தொடர்பான மற்றொரு வழக்கிலும், நாடாமன்ற உறுப்பினருக்கு விளக்க மறியல் விதிக்கப்பட்டது.

இது குறித்து சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க, சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் சிறைச்சாலையில் இருந்தார் எனத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்