தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு

🕔 August 26, 2021

ரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைவதைக் காண்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

‘ஃபைசர்’ தடுப்பூசியை இரு டோஸ் செலுத்திக் கொண்டவர்களிடம் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு ஒரு மாத காலத்தில் 88 சதவீதமாக இருந்தது. இது ஐந்து முதல் ஆறு மாதங்களில் 74 சதவீதமாக குறைந்திருக்கிறது.

‘ஆஸ்ட்ராசெனீகா’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு தொடக்கத்தில் 77 சதவீதமாக இருந்தது, நான்கு முதல் ஐந்து மாத காலத்தில் இது 67 சதவீதமாக குறைந்திருக்கிறது.

தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறையும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஒரு பக்கம் கொரோனா தொற்று – புதிய பரிமாணங்களை எடுத்து வந்தாலும், மக்கள் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்படாமலும், உயிரிழப்புகள் ஏற்படாமலும் இருப்பது போன்ற விஷயங்களில் கொரோனா தடுப்பூசிகள் சிறப்பாகவே செயல்படுகின்றன.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்