வீடியோ விளையாட்டுக்கு அடிமையான மாணவன்: கைத்தொலைபேசியை தாய் பறித்தெடுத்ததால் தற்கொலை

🕔 August 26, 2021

ன்லைன் வீடியோ விளையாட்டுக்கு (video game) அடிமையான சிறுவன் ஒருவரிடமிருந்து, கைத்தொலைபேசியை பறித்து எடுத்ததால், சம்பந்தப்பட்ட சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாத்தறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

மாத்தறை – ரொட்டும்ப பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரே, அவரின் தாய் – கைப்பேசியை பறித்து எடுத்ததால் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதியிலுள்ள பல சிறுவர்கள் குறிப்பிட்டதொரு ‘ஒன்லைன்’ வீடியோ விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ‘ஒன்லைன்’ வழியாக நடத்தப்படுகின்றன. இதனால் கைத்தொலைபேசிகள் அல்லது கணினிகளை பிள்ளைகள் தொடர்ந்து தம்வசம் வைத்திருக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்