தலிபான் தலைவரை சிஐஏ பணிப்பாளர் காபூலில் சந்தித்து ரகசியப் பேச்சு

🕔 August 24, 2021
வில்லியம் பேன்ஸ் – சிஐஏ பணிப்பாளர்

மெரிக்க உளவு அமைப்பான சிஐஏ பணிப்பாளர் வில்லியம் ஜே. பேன்ஸ் (William Burns) – தலிபான் தலைவர் அப்துல் கனி பராதரை (Abdul Ghani Baradar) காபூலில் ரகசிய இடத்தில் சந்தித்துப் பேசியுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றிய பிறகு, இரு தரப்பு தலைவர்களும் முதல் முறையாக சந்தித்துப் பேசியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ள வொஷிங்டன் போஸ்ட்; காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமானோர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற காத்திருக்கும் வேளையில், தமது உளவு அமைப்பின் தலைவரை தலிபான் தலைவரிடம் பேச அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு பற்றி தலிபன் தரப்பு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டுப்படைகள் மற்றும் வெளிநாட்டினர் வெளியேற நிர்ணயிக்கப்பட்ட ஓகஸ்ட் 31 காலக்கெடு தொடர்பாக இரு தரப்பும் விவாதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்