ஆசாத் சாலியை 31ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

🕔 August 17, 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலியை இம்மாதம் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று (17) உத்தரவிட்டார்.

சந்தேக நபரை இன்று மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பார்வையிட்ட பிரதான நீதவான், குற்றப் புலனாய்வு பிரிவினரின் வேண்டுகோளின் பேரில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்தேக நபரை பார்வையிட்ட நீதவான்; அவரின் சிகிச்சை முடிவுறும் வரை, சிறைக் காவலில் அவரை வைக்குமாறும் கூறினார்.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி  கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி கைது செய்யப்பட்டு, இதுவரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்