ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள்: ‘வில் கிளப்’ அன்பளிப்பு

🕔 July 19, 2021

கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காகவும், பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தும் வகையிலான ஒரு தொகுதி வைத்திய உபகரணங்கள், ஆலையடிவேம்பு சுகாதாரப் பணிமனை மற்றும் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றுக்கு இன்று திங்கட்கிழமை அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ‘வில் கிளப்’ (WILL club) இந்த உபகரணங்களை வழங்கியது.

சேர்ச் ஃபோர் கொமன் கிரவ்ன்ட் (Search For Common Ground) இன் முழுமையான நிதி பங்களிப்புடன், அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஊடாக நடைமுறைப் படுத்தப்படுகின்ற கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள், சமாதானம் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக பெண்களை வலுவூட்டல் எனும் செயல் திட்டத்தின் மூலம், அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களை உள்ளடக்கி ‘வில் கிளப்’ (WILL club) உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 05 லட்சம் ரூபா பெறுமதியான தெளி கருவி இயந்திரம் (Spraying Machine), ஒக்சிஜன் செறிவூட்டி (Oxygen Concentrator), Fogging Machine மற்றும் கொவிட் விழிப்புணர்வூட்டும் வெளிச்சப் பதாகை (Covid 19 Awareness light board) ஆகியவை, இதன்போது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அகிலனிடம் கையளிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ரவிச்சந்திரன், கிருபாகரன், அரசாங்க அரச சார்பற்ற நிறுவனங்க ளின் இணைப்பாளர் இர்பான், அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற இணையத்தின் தலைவர் பரமசிங்கம், ஊடகவியலாளரும் சமுர்த்தி உத்தியோகத் தருமான சுகிர்தகுமார், ‘வில்’ கிளப் அங்கத்தவர்களான உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்கள் எஸ். கிந்துஜா, எஸ்.எம். சித்தி நிலுபா ஏ.டப்ளியு.எஃப் திட்ட இணைப்பாளர்க ளான கமலவாணி சுதாகரன், ஜனுஷியா சுஜீதராஜ் மற்றும் என். சுமந்தி ஆகியோரும் கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்