பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும்

🕔 July 1, 2021

கோதுமை மாவின் விலை திருத்தப்படாவிட்டால், பாணின் விலை திங்கள்கிழமை (ஜூலை 05) முதல் 10 ரூபாவாக உயரும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜெயரத்ன தெரிவிக்கையில், ஏனைய பேக்கரி பொருட்களின் விலையும் ரூபா முதல் 10 ரூபா வரை உயரக்கூடும் என்றார்.

பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் கோதுமை மாவின் விலை கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 25) முதல்18 ரூபா அதிகரித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

“இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காணுமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உலக சந்தையில் மாவின் விலை உயர்ந்து, மாவு நிறுவனங்களால் அந்த விலையை தாங்க முடியாவிட்டால், ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும். ஏனெனில் 18 ரூபா ஒரு பெரிய தொகை. அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி மாவின் விலையை குறைந்த தொகைக்கு திருத்தியிருந்தால், அதிக நிவாரணம் வழங்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்