தெரண ஊடகவியலாளர் சத்துர அல்விஸ்; கொவிட் தொற்றுக்குள்ளான அமைச்சருடன் நேரடி தொடர்பு

🕔 January 28, 2021

கொவிட் தொற்றுக்குள்ளான ராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ, கடந்த சில நாட்களுக்கு மன்னர், இரண்டு ஊடகங்கள் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது.

அருந்திக பெனாண்டோ – பிசிஆர் பரிசோதனை செய்தவற்கு ஒரு நாள் முன்பு, தெரண தொலைக்காட்சியில் சத்துர அல்விஸ் தொகுத்து வழங்கிய ‘பிக் ஃபோகஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதன் மூலம் கொவிட் தொற்றுக்குள்ளான ராஜாங்க அமைச்சர் அருந்திகவுடன் நேரடி தொடர்பில் சத்துர அல்விஸ் இருந்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் – நிகழ்ச்சியின் போது முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலியொன்றில் நடந்த நிகழ்ச்சியொன்றிலும் அருந்திக பெனாண்டோ கலந்து கொண்டார்.

தொடர்பான செய்தி: ராஜாங்க அமைச்சர் அருந்திகவுக்கு கொவிட் தொற்று

Comments