சதொச கிளைகளில் 15 ரூபாவுக்கு முகக் கவசம்: வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

🕔 December 22, 2020

முகக்கவசங்களை சதொச கிளைகளின் பெற்றுக் கொள்ள முடியும் என என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் 15 ரூபாவிற்கும், மொத்த விற்பனையாளர்கள் 12 ரூபாவிற்கும் இன்று தொடக்கம் முகக்கவசங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சதொச நிறுவனத்துக்கு 15 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் வர்த்தக அமைச்சர் உரையாற்றியபோது இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு சதொச தலைமையகத்தில் இடம்பெற்றது.

அடுத்த வாரம் தொடக்கம் தொற்று நீக்கிகளையும் குறைந்த விலைக்கு விநியோகிக்கப் போவதாகவும் அமைச்சர் கூறினார்.

2021ஆம் ஆண்டு தொடக்கம் இளம் தொழில் முயற்சியாளர்கள் ஆயிரம் பேரை இணைத்துக் கொண்டு, குறைந்த விலையில் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்யக்கூடிய ஆயிரம் ‘கியூஷொப்’ விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்