கொரோனாவினால் மரணித்தோரை எரிப்பதற்கு எதிரான மனுக்கள்; விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

🕔 December 1, 2020

கொரொனாவினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை எரிக்கவேண்டுமென வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைவிசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை எனத் தெரிவித்து, நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொரோனாவினால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தெரிவை வழங்காமல் எரிப்பதற்கு எதிராக, கடந்த மே மாதமளவில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுப்பதா – இல்லையா எனத் தீர்மானிக்கும் பரிசீலனை நேற்றும் இன்னும் நடைபெற்றது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான முர்து பெனாண்டோ மற்றும் ப்ரீதி பத்மன் சுரசேன ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இடம்பெற்றன.

இறுதியில் குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை எனத் தெரிவித்து – அவற்றினை நீதிமன்றம் நிராகரித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்