மதம் ஓர் இனத்தை தீர்மானிக்கின்றது; மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஸாம்

🕔 November 8, 2015

Nizam - 097– எப். முபாரக் –

மிழ் மொழி வாழ வேண்டும் என்றால் அது ஆள வேண்டும். மொழிக்கும் நிலத்துக்கும் தொடர்பு உண்டு என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம். நிசாம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பண்பாட்டு திணைக்களம்  தமிழ் இலக்கிய விழாவினை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை நடத்துகின்றது.

நேற்று சனிக்கிழமை இரண்டாம் நாள்  மாலை நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“சில சொற்கள் இன்று தமிழில் வழக்கொழிந்து இல்லாது போய் விடும் நிலை தோன்றி உள்ளது. ஒரு மொழி பேணப்படவேண்டுமானால், அதனை நாம் தொடர்ச்சியாக பேச வேண்டும். ஆனால் இன்று சில தமிழ் அறிஞர்கள் கூட தங்களுக்குள் பேசும் போது  ஆங்கிலத்தில் பேசுகின்றார்கள்.எமக்குள் நாம் தமிழ் மொழியிலேயே பேச வேண்டும்.

மொழி இனத்தை தீர்மானிக்கின்றதா, அல்லது மொழி மதத்தை தீர்மானிக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்துக்களின் மொழி தமிழ் அல்ல. ஆனால் தமிழை பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் என அழைக்கப்படுவதில்லை.

தமிழ் பேசும் இந்துக்கள் தமிழர்கள் என்றும் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் தமிழர்கள் என்றும் அழைக்கப்படகின்றார்கள்.ஆனால் தமிழை பேசும் முஸ்லிம்கள் இங்கு தமிழர்கள் என அழைக்கப்பவதில்லை. ஆனால் அரபுமொழி பேசுபவர்கள் அரபியர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இங்கு மதம் ஓர் இனத்தை தீர்மானிக்கின்றது.  இவை ஆராயப்பட வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்