தலைப்புச் செய்திகள்

தீபாவளி காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களுக்கு அபராதம்

Bus - check up - 095
– க. கிஷாந்தன் –

தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும், பஸ்களை இணங்கண்டு அபராதம் விதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக தூரப்பிரதேசங்களிலிருந்து ஹட்டன் பகுதிகளுக்கு பயணிக்கும் தனியார் பஸ்களை இன்று ஞாயிற்றுக்கிழமை திடீர் பரிசோதனை செய்யப்பட்டன.

மத்திய மாகாண தனியார் போக்குவரத்து சபையின் வாகன பரிசோதக அதிகாரிகள் ஹட்டன் பகுதியில் இந்த திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

இதன்போது, இதில் பணம் கொடுத்து பயணச்சீட்டு பெறாதவர்கள், நடத்துநர் அனுமதி பத்திரம் இல்லாத நடத்துநர்கள் மற்றும் பஸ்ஸில் அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதிகள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த பரிசோதனை தீபாவளி பண்டிகை முடியும் வரை நடத்தவிருப்பதாகவும், கடந்த இரண்டு நாட்களில் பரிசோதனை செய்ததன் மூலம், ஜம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.Bus - check up - 096Bus - check up - 098Bus - check up - 097