
நாட்டில் கொரோனாவினால் மரணமடைந்தோர் தொகை மேலும் 05ஆல் அதிகரித்துள்ளது.
இதன்படி கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் மொத்தத் தொகை 53ஆக உயர்ந்துள்ளதுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை மாலை, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் 15,723 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இருந்த போதும் 11,031 பேர் நோயிலிருந்து தேறியுள்ளனர். இதன்படி 4,644 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.



