சுய தனிமைப்படுத்தலில் 35 ஆயிரம் பேர் உள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தகவல்

🕔 October 27, 2020

நாட்டில் இன்று வரையில் 35,000 இற்கு அதிகமானவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று வரையில் சுமார் 185,000 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த தினங்களில் பொதுப் போக்குவரத்தில் உரிய முறை மையில் சமூக இடைவெளி ஒழுங்கு விதிகள் பின் பற்றப் படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அத்துடன்,  பொது இடங்களிலும், வரிசைகளிலும் இடைவெளி ஒழுங்கு விதிகளைப் பொதுமக்கள் பின்பற்றாத நிலைமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

பொதுமக்கள் தொடர்ந்தும் இவ்வாறாக செயற்படுவார்களாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோ கண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்