கிழக்கில் ஒரேநாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று; கல்முனை பிராந்தியத்தில் 09 பேர் பாதிப்பு

🕔 October 24, 2020

கொரோனா தொற்றினால் கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஏ. லதாகரன் தெரிவித்துள்ளார்.

“இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் 06 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும், கல்முனைப் பிராந்தியத்தில் 09 பேரும், அம்பாறையில் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கல்முனைப் பிராந்தியத்தில் – கல்முனைக்குடியில் 03 பேரும் நிந்தவூரில் பெண்ணொருவரும் பொத்துவிலில் 05 பேருமாக 09 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான 11 பேரும் வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

அம்பாறை நகரில் ஒருவர் இனங்காணப்பட்டவர் – திவுலப்பிட்டியவில் நடந்த திருமண வீடொன்றுக்குச் சென்று திரும்பிவந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

நிந்தவூரில் இனங்காணப்பட்ட பெண்ணுக்கு தொற்று எங்கிருந்து வந்தது என்பது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்