இந்திய பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர அட்டாளைச்சேனை சப்னாஸ், புலமைப் பரிசில் மூலம் தெரிவு

🕔 October 17, 2020

– றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனையை சேர்ந்த நஸார் முஹம்மட் சப்னாஸ், இந்தியாவிலுள்ள ஆர்.கே. (RK) பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் கற்கை நெறியை தொடர்வதற்கு, புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

நான்கு வருடங்களைக் கொண்ட முற்றிலும் இலவசமான இந்தக் கற்கை நெறியினை தொடர்வதற்கான புலமைப் பரிசில் வாய்ப்பினை, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நஜீப் டிலாஸ் அஹமட் என்பவரும் பெற்றுள்ளார்.

சப்னாஸ் – இந்தியாவில் தங்கியிருந்து இந்தக் கற்கை நெறியினை தொடரும் 04 வருட காலப்பகுதிக்கான தங்குமிட வசதிக்குரிய செலவுகளை, பொதுஜன பெரமுன கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளரும் கல்முனை தொகுதி அமைப்பாளருமான றிஸ்லி முஸ்தபா பொறுப்பேற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் ராஜ்கோட் – குஜராத் பகுதியில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தின் ஊடாக, பல்வேறு கற்கை நெறிகளையும் தொடர்வதற்கு, ஒவ்வொரு வருடமும் புலமைப்பரிசில் திட்டம் மூலம் இலங்கை மாணவர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி சப்னாஸ், ‘நாம் ஊடகர் பேரவை’யின் (We journalists forum) உறுப்பினராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்