அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல திருட்டுப் பேர்வழி; அஸீம் குழுவினரிடம் அகப்பட்டார்: ஹெரோயினும் சிக்கியது

🕔 October 4, 2020

– அஹமட் –

க்ரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த அஹீல் என அழைக்கப்படும் எம்.ரி. இம்தியாஸ் என்பவரை நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 04 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டப்ளியு.என்.எஸ்.பி. விஜயதுங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, குற்றப் பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான குழுவினர், சந்தேக நபர் மறைந்திருந்த பகுதியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபர் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் 20க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்றும், போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த இவர் – நீண்ட நாட்களாக தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்றைய தினம் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட முல்லைத்தீவு கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மேற்படி சுற்றி வளைப்பு நடவடிக்கையில் சார்ஜன் ஆஸாத், பொலிஸ் கொஸ்தாபல் லக்மால் மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் அனோஜன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அண்மைக்காலமாக, பொலிஸ் உப பரிசோதகர் அஸீம் தலைமையிலான குழுவினர் – போதைப் பொருள் மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புபட்ட முக்கிய நபர்களை தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: அக்கரைப்பற்றில் சிக்கிய ஹெரோயின் வியாபாரிகள்; வலை விரித்துப் பிடித்த அஸீம் குழு: தொடரும் அதிரடி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்