ஆசிரியை ஸுபா எழுதிய கவிதை நூல், மருதமுனையில் வெளியீடு

🕔 October 4, 2020

– நூருள் ஹுதா உமர் –

ருதமுனையைச் சேர்ந்த ஆசிரியை பாத்திமா ஸுபா அப்துல் றஊப் எழுதிய ‘சுவாசித்துக் கொண்டிருக்கின்றேன்’ எனும் தலைப்பிலான கவிதை நூலின் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அச் சங்கத்தின் தலைவரும், இலக்கிய விமர்சகருமான ஜெஸ்மி எம். மூஸா தமைமை தாங்கினார்.

இந் நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது வரவேற்பு மற்றும் அறிமுக உரையை இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் பொருளாளர் எச்.எம்.எம். மன்சூர் நிகழ்த்தினார்.

நூல் நயத்தல் உரையை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆசிரியர் ஜெஸ்மி எம். மூஸா வழங்க, நூலாய்வுரையை அச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் எம்.அப்துல் றஸாக் நிகழ்த்தினார்.

பிரதேசத்தின் மூத்த இலக்கியவாதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு பிரதிகளை பெற்று கொண்டனர்.

Comments