700 ஊடகவியலாளர்கள் 10 வருடங்களில் கொலை; ஐ.நா. தகவல்

🕔 November 2, 2015
Journalist killed - 01லகளாவிய ரீதியாக கடந்த 10 வருடங்களில் 700 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை கண்டிக்கும் நோக்கில் பெயரிடப்பட்டுள்ள ‘சர்வதேச வன்முறையை எதிர்க்கும் தினத்தை’ முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே, ஐக்கிய நாடுகள் சபை இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்டி தினம் இன்று திங்கட்கிழமை  அனுஷ்டிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர்கள்,  மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் செய்தியாளர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும் செயற்பட்டவர்களாவர்.

2013 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி மாலியில் வைத்து இரண்டு ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்தே ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த தினத்தை அனுஷ்டிக்கத் துவங்கியது.

2014 ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய தினத்திலிருந்து இதுவரை ஈராக்கில் 13 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.நா.வின் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 10 வருடங்களில் மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்நேலியகொட உட்பட பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் எக்நேலியகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போக செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் மூத்த தமிழ் ஊடகவியலாளர்களான சிவராம், நிமலராஜன் உட்பட பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஊடகவியலாளர்களின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இதேவேளை, 1992 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டுவரை, 1149 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, ஊடகவியலாளர்கபை் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்