திருகோணமலை பேரூந்து நிலைய மலசல கூடம் குறித்து முறைப்பாடு
– எப். முபாரக் –
திருகோணமலை பேரூந்து நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக, பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
திருமலை நகர சபையின் கண்காணிப்பின் கீழ் காணப்படும் இம் மலசல கூடம், குத்தகை அடிப்படையில் விடப்பட்டுள்ளடதாகவும், மலசல கூடத்துக்காக நாளொன்றுக்கு 1,600 ரூபாய் நகர சபைக்கு வழங்கிவருதாகவும் தெரியவருகிறது.
மலசல கூடத்தை பயன்படுத்தும் ஒருவரிடம், தடவையொன்றுக்கு பத்து ரூபாய் அறவிடப்படும் நிலையில், குறித்த மலசல கூடத்தினை ஏன் இவ்வாறு அசுத்மாக வைத்திருக்கின்றனர் என்று மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
திருகோணமலை நகர சபைக்கு, இந்த மலசல கூடம் அசுத்தமாக காணப்படுகின்றமை தொடர்பில், பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டும், இதுவரை எதுவித நடவடிக்ககைகளும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பாக திருமலை நகர சபையின் செயலாளர் ஏ.எல்.எம். நபீலுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது;
ஏற்கனவே மக்களின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டு அம்மலசல கூடத்தினை புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.