தப்பியது பூமி

🕔 November 1, 2015

Meteorite - 097
பூ
மிக்கு அருகாமையில் 400 மீட்டர் அகலமான  விண்கல் ஒன்று, நேற்று சனிக்கிழமை அண்டவெளியில் பயணம் செய்ததாக, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை இலங்கை விண்கோள் ஆராய்ச்சி மைய அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே விநாடிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த விண்கல் பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2015-ரி.பி.145 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லினை, சாதாரண கண்பார்வை மூலம் காணமுடியாது என தெரிவித்துள்ள விண்வெளி ஆராச்சியாளர்கள், தொலைநோக்கியின் ஊடாக பார்க்க முடியும் என்று கூறியுள்ளனர்.

இதே போன்றதொரு விண்கல் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பூமிக்கு அருகாமையில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டு மீட்டர் நீளமான விண் பொருள் ஒன்று எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கையில் இருந்து 65 கிலோ மீட்டர் தென் கடற்பிராந்தியத்தில் விழும் என, ஆதர் சி. கிளாக் விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்