தலைவர் அஷ்ரப் குறித்து, இளைய சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டிய தேவையுள்ளது; இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன்

🕔 November 1, 2015

Ariff samsudeen - 0123
– சுலைமான் றாபி –

முன்னொரு காலத்தில் இளைஞர்களிடம் இருந்த சமூக உணர்வு, இப்போதைய இளைஞர்களிடம் அருகி வருவது கவலை தருவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரு, கிழக்குமாகாணசபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த இளைஞர் மாநாடு,  நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்க தலைமை தாங்கி  உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்;

“மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் நமது சமூகத்துக்கு ஆற்றிய அளப்பெரிய சேவைகள், அவர் காட்டிய வழிகள் மற்றும் முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை பெற்றுத்தந்தமை போன்ற விடயங்களை இப்போதைய இளைய சமூதாயத்துக்கு புரியவைக்க  வேண்டியுள்ளது.

இளைஞர்களை ஒன்றிணைத்து அவர்களை சமூக உணர்வாளர்களாகவும், எதிர்கால சமூகத்தை வழிநடத்தக் கூடியவர்களாகவும் ஆக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடுதான், இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது” என்றார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஐ.எல்.எம். மாஹிர்,  கே.எம். ஜவாத், மு.கா.வின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ஏ.எல். அப்துல் மஜீத் உள்ளிட்டோர் அதிதிகளாவும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்