முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது

🕔 July 5, 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் அவர் கைதானார்.

பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாயமை தொடர்பான வழக்கிலேயே இவர் ஆஜராகத் தவறியிருந்தார்.

கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்