வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

🕔 July 4, 2020

நாடாளுமுன்றத் தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமுரிய வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு கோடியே 72 லட்ச வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும், அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகள் மற்றும் 313 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Comments