சஹ்ரானுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் எவ்வித தொடர்புகளும் இல்லை: ஹக்கீம்

🕔 June 15, 2020

ஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேக நபர் சஹ்ரான் ஹாசீம் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும் அந்த தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி, பிலிமதலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் இவ்வாறு தமது கட்சியின் மேல் குற்றம் சுமத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான ஒரு குழு தமக்கு மத்தியில் இருப்பதை யாரும் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments