நோன்பு பெருநாள் தினத்தில் ஊரடங்கு; வீட்டிலிருந்து கொண்டாட, நல்ல சந்தர்ப்பம்

🕔 May 22, 2020

ரடங்குச் சட்டம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், ஏனைய மாவட்டங்களில் நாளை இரவு எட்டு மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 05 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்பபடுத்தப்பட்டுள்ள நிலையில் , மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் செயற்பாடுகள் நாளையும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்படும் காலப்பகுதியிலேயே நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வீட்டிலிருந்தவாறே நோன்புப் பெருநாளைக் கொண்டாடுமாறு முஸ்லிம் அமைப்புக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.

பெருநாள் தினத்தில் ஊடரங்கை அமுல் செய்ய வேண்டும் என, முஸ்லிம்களின் தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்