நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்; சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை: மருந்துகளைப் பெறுமாறும் அறிவுறுத்தல்

🕔 April 30, 2020

நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எலிக்காய்ச்சலுக்கான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, விவசாய நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் தமது பகுதிகளுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களிடம், மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெலிசர கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரியொருவர் மரணித்த நிலையில், அவர் எலிக் காய்ச்சலால் இறந்ததாக, கடற்படை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: வெலிசர கடற்படை வைத்தியசாலையில் உயிரிழந்த அதிகாரிக்கு எலிக் காய்ச்சல்; கொரோனா இல்லை: அறிக்கையில் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்