முன்னர் அறிவிக்கப்பட்ட படி, ஊரடங்கு நாளை தளர்த்தப்படாது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு

🕔 April 26, 2020

ரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை நாட்டின் அநேகமான மாவட்டங்களில் தளர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்கிழமைதான் ஊரடங்கு தளர்த்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விடுமுறையில் உள்ள அனைத்து முப்படையினரும் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் – அவர்கள் தமது பணியிடங்களுக்கு உடனடியாகத் திரும்புவதற்கு ஏதுவான முறையில் – நாளை, திங்கள், நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த முறையின்படி ஊரடங்குச் சட்டம், நாளை மறுதினம், செவ்வாய்கிழமையில் இருந்து நடைமுறையில் இருக்கும்.

இதன்படி – கொழும்பு , களுத்துறை , கம்பஹா , புத்தளம் மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும், 28ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை 5:00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்றிரவு 8:00 மணிக்கு மீண்டும் நடைமுறைக்கு வரும்.

இந்த நடைமுறை, மே 01ஆம் திகதி, வெள்ளி, வரை தொடரும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்