அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர், தற்போது ‘நோய்க் கிருமி அற்ற நிலை’யில் உள்ளார்

🕔 April 23, 2020

– பாறுக் ஷிஹான்

க்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட  இருவரில் ஒருவருக்கு ‘நெகடிவ்’ பெறுபேறு (நோய்கிருமிகள் அற்ற நிலை) தற்போது கிடைத்துள்ளது  என, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன் தெரிவித்தார்.

“கல்முனை பிராந்திய  சுகாதார பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் அடையாளப்படுத்தப்பட்ட இருவர் சிகிச்சைகளுக்காக பொலநறுவை – வெலிகந்த  ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

இவர்களில் தொற்றுக்குள்ளான ஆணிடம் – இரண்டு கிழமைகளின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மாதிரி அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அந்த அறிக்கை ‘நெகட்டிவ்’வாக (நோய்கிருமி அற்ற நிலை) உள்ளது. இரண்டு நாட்களின் பின்னர் மீண்டும் ஆய்வுகள் செய்யப்பட்டு – அவர் குணம் அடைந்து விட்டார் என்று நிரூபணமாகும் போது, வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்.

இருந்தபோதும், அவர் வீட்டில் இரு கிழமைக்கு தனிமைப்படுத்தப்படுவார். அதே போன்று குறித்த ஆணின் மனைவிக்கும் இவ்வாறான முடிவுகள் வரும் பட்சத்தில், அவரும் இதே நடைமுறைக்கு உட்படுத்தப்படுவார்.

இவர்களுடன் தொடர்புடைய 80 நபர்களை பொலநறுவை – தமின்ன பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

தொற்று ஏற்பட்டவர்களுக்கு – பின்னர் இவ்வாறான ‘நெகடிவ்’ பெறுபேறுகள் கிடைக்கின்ற போது, நாமும் பெரும் மகிழ்ச்சி அடைவோம்.

இது தவிர அக்கரைப்பற்று 19  பகுதி தனிமைப்படுத்தல் சூழ்நிலையை தற்போது எதிர்கொண்டுள்ள போதிலும், எதிர்காலத்தில் இத்தடையினை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்