ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி குற்றம் புரிந்திருந்தாலும், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது: உதய கம்மன்பில

🕔 April 22, 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றமொன்றைபுரிந்திருந்தாலும், அரசியலமைப்பின் 35(1) வது பிரிவின்படி, அவர் மீது வழக்குத் தொடர முடியாது என்று பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று அவரிடம் பலரும் கேட்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், அதற்கு பதிலளிக்கும் வகையில், மேற்படி கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரின் சொந்த மாவட்டமான பொலநறுவையிலிருந்து, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி சார்பாக, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான எந்த விசாரணையிலும் இல்லை என்று கடந்த வாரம் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்