சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது: ரி – 56 ரக ஆயுதம் மற்றும் ரவைகளும் மீட்பு

🕔 April 21, 2020

– பாறுக் ஷிஹான் –

ரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற பிரச்சினையின் போது, துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, அவர் பயன்படுத்திய ரி-56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளும் மீட்கப்பட்டன.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றது.

அதற்கு அமைய சம்மாந்துறை பொலிஸார், 26 வயதுடைய சந்தேக நபரை இன்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளதோடு, மறைத்து வைத்திருந்த ரி – 56 ரக துப்பாக்கி மற்றும் 09 ரவையுடன் கூடிய ரவைக்கூட்டையும் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போது இரு துப்பாக்கி வேட்டுக்களை சந்தேக நபர் தீர்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரை நாளை புதன்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்