கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக அதிகரிப்பு

🕔 March 31, 2020

நாட்டில் கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை, கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 173 பேர், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஆயினும் இந்தத் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 பேர் சுகமடைந்துள்ளனர்.

உலகளவில் 07 லட்சத்து 85 ஆயிரத்து 715 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இவர்களில் 37,814 பேர் மரணமடைந்துள்ள போதும், 01 லட்சத்து 65 ஆயிரத்து 606 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

Comments