கொங்கோ முன்னாள் தலைவர் கொரோனாவுக்குப் பலி

🕔 March 31, 2020
யோம்பி ஒபாங்கோ (இடது) மற்றும் பிரான்ஸ் முன்னாள் அதிபர் வலேரி ஷீஸ்காங் டஸ்டாங்

கொங்கோ நாட்டின் முன்னாள் தலைவர் ஜாக் ஜோஷாங் யோம்பி ஒபாங்கோ, கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் இல் மரணமடைந்த அவருக்கு வயது 81 வயதாகிறது.

அவர் ஏற்கனவே உடல் நலமில்லாமல் இருந்ததாக, அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1977 முதல் 1979 வரை கொங்கோ நாட்டின் தலைமைப் பதவியில் ஜாக் ஜோஷாங் யோம்பி ஒபாங்கோ இருந்தார். 1979இல் தற்போதைய தலைவர் டெனீ சசூ இன்கேசோ ஆட்சியை கைப்பற்றியபோது இவர் பதவியை இழந்தார்.

1991இல் பல கட்சி ஜனநாயகம் மீண்டும் நிலை நாட்டப்படும்வரை பல ஆண்டுகள் சிறையில் இருந்த இவர், 1997இல் உள்நாட்டுப் போர் தொடங்கும்வரை பிரதமராக இருந்தார்.

அதன் பின்னர் 1997இல் பிரான்ஸ் இல் – இவர் தஞ்சமடைந்தார்.

Comments