ஒலுவில் துறைமுக பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் அமைக்கப்படும்: கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்

🕔 March 27, 2020

– பாறுக் ஷிஹான் –

லுவில் துறைமுக பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் ஒன்றை  கடற்படையினரின் உதவியுடன் அமைக்கவுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

இதேவேளை, இப்பகுதியில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு வழிமுறைகளில் விழிப்பூட்டல் மேற்கொண்டு மக்களை அறிவூட்டி வருவதாகவும் டொக்டர் சுகுணன் கூறினார்.

“தற்போதும் எமது பிராந்தியத்தில் கரோனா வைரஸ் தாக்கம் குறைவாக காணப்பட்ட போதிலும், எமதுசுகாதார நடைமுறைகள் இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

அந்த வகையில் எதிர்காலத்தில் வைரஸின் தாக்கம் எமது பிரதேசத்தில் அதிகரிக்கும் பட்சத்தில், அதற்காக இலங்கை கடற்படையினரின் உதவியுடனும் எமது பூரண ஆதரவுடனும் ஒலுவில் துறைமுக பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் ஒன்றை அமைக்க இருக்கின்றோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்