கொரோனா தொற்று: நாட்டில் 100ஆவது நபர் அடையாளம் காணப்பட்டார்

🕔 March 24, 2020

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை (இன்று செய்வாய்கிழமை 03.03 மணி வரையில்) 100ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் இதே காலப்பகுதியில் 03 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இருவர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை உலகளவில் இன்று மாலை 03.03 மணி வரையிலான காலப்பகுதியில் 16,510 பேர், கொரோனா தொற்றினால் இறந்துள்ளனர்.

Comments