அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: கைதி ஒருவர் பலி, மூவர் படுகாயம்

🕔 March 21, 2020

னுராதபுரம் சிறைச்சாலையில் கலகத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிறைகக் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து, அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியின் போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவித்து, அவர்கள் அங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதையடுத்து அங்கு குழப்ப நிலைமை ஏற்பட்டது.

இதன்போது அங்குள்ள ஏனைய கைதிகள் தமக்கு பாதுகாப்பு இல்லையென சிறைக்கூடங்களை தகர்த்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி சுமார் 900 கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments