ஊரடங்கை மீறிய 130 பேர் கைது

🕔 March 21, 2020

ரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 31 பொலிஸ் பிரிவுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்