‘புதிது’ செய்திக்கு பலன்: முடிதிருத்தும் நிலையங்களை மூடுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை உத்தரவு

🕔 March 19, 2020

ட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள முடிதிருத்தும் நிலையங்களை மறு அறிவித்தல் வரை உடனடியாக மூடுமாறு, எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக, பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்தார்.

‘அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதேச சபை அலட்சியமாகச் செயற்படுவதாக மக்கள் விசனம்’ எனும் தலைப்பில் நேற்றைய தினம் செய்தியொன்றினை ‘புதிது’ வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து புதிது செய்தித்தளத்தை தொடர்பு கொண்ட தவிசாளர் அமானுல்லா; மேற்படி தகவலைக் கூறினார்.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில இயங்களும் ஹோட்டல்களில் சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு அறிவித்துள்ளதாகவும், தவிசாளர் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதேச சபை அலட்சியமாகச் செயற்படுவதாக மக்கள் விசனம்

Comments