தேர்தல் பிற்போடப்பட்டது: மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்

🕔 March 19, 2020

திட்டமிட்டபடி, ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியன்று பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் காலம் நிறைவடைந்த பின்னர், அவர் இந்த தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

கொரோனா தொற்று காரணமாக தேர்தலை ஒத்தி வைக்குமாறு பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments