வெளிநாட்டிலிருந்து வந்தோர், பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு உத்தரவு

🕔 March 17, 2020

த்தாலி, பிரிட்டன், ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்த அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

இததொடர்பாக பாதுகாப்பு அமைச்சு; விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு;

 பாதுகாப்பு அமைச்சின் செய்தி

‘நீங்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலான் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்திருந்தால் , உங்களதும் சமூகத்தினதும் நலனுக்காக, அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 119 மத்திய நிலையத்தில் உடனடியாக பதிவு செய்யுங்கள்.

இந்த உத்தரவுக்கு முரண்பட்ட வகையில் செயல்படுவோருக்கு எதிராக,, தொற்றுத் தடைக்காப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று அறிவிக்கின்றோம்’.

இதேவேளை, இத்தாலி மற்றும் கொரியாவில் இருந்து வருகை தந்த  170 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்