மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம்: ஜனாதிபதி திறந்து வைத்தார்

🕔 January 25, 2020

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று சனிக்கிழமை ராகமையில் திறந்து வைக்கப்பட்டது.

ராகமை போதனா வைத்தியசாலையில் ‘அயாட்டி’ என்கிற பெயரில் ‘மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய சிறப்பு மையம்’ ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கான பராமரிப்பு மையமாக இது செயற்படும்.

களனி பல்கலைக்கழகம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், எம்.ஏ.எஸ். ஹோல்டிங்க்ஸ் மற்றும் இலங்கை ராணுவத்தினர் இந்த மையத்தின் பங்களாளிகளாவர்.

Comments