பாலியல் கல்வியில் 50 வீதமான இளைஞர்களுக்கு முறையான அறிவில்லை

🕔 December 30, 2019

நாட்டில் 50 வீதமான இளைஞர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் இனப் பெருக்க சுகாதார கல்வி ஆகியவற்றில் முறையான அறிவு இல்லை என, தேசிய ரீதியிலான இளைஞர் கணக்கெடுப்பு அறிக்கையொன்றின் மூலம் தெரிய வந்துள்ளதாக சட்டத்தரணி கௌசல்யா ஆரியரத்ன கூறியுள்ளார்.

பாலியல் ரீதியான அறிவு மட்டுமன்றி குறித்த இளைஞர்கள் தமது உடல் பற்றிக் கூட அறிந்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறியாமை காரணமாக பாலியல் இறப்புகள், குழந்தை இறப்புகள், சட்டவிரோத கருக்கலைப்புகள் மற்றும் பிரசவ இறப்புகள் அதிகரித்துள்ளன என்று புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டு 15 வயதிற்குட்பட்ட 75 குழந்தைகள் எச்.ஐ.வி.க்கு பலியாகியுள்ளனர் என்றும், பெரும்பாலான இளைஞர்கள் இணையத்தினூடாக பெறப்படும் ஒழுங்கற்ற பாலியல் கல்வியால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்