தலைமைப் பதவி வழங்கப்படா விட்டால், பிரதமர் வேட்பாளராக களமிறங்க மாட்டேன்: சஜித்

🕔 December 18, 2019

க்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்படாவிட்டால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் நேற்று செவ்வாய்க்கிழமை தனது கட்சி ஆர்வலர்களை சந்தித்த போது இதனைக் கூறினார்.

தான் கட்சியின் தலைவராக வருவதை பெரும்பான்மையான கட்சியின் ஆதரவாளர்கள் விரும்பினால், கட்சித் தலைமையை ஏற்பதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்தோடு தான் கட்சியை பிளவுபடுத்தி கட்சியில் பிரிவுகளை உருவாக்க விரும்பவில்லை என தெரிவித்த சஜித் பிரேமதாச, அவ்வாறு பிரிந்திருப்பவர்களை ஒன்றாக்க முயற்சி செய்வதாகவும் சுட்டிக் காட்டினார்.

Comments